வில்லியனுார்: கொம்பாக்கம்பேட் சுடுகாட்டிற்கு மதில் சுவர் அமைப்பதற்கு எதிர்கட்சித் தலைவர் சிவா பூமிபூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார். புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் புதுச்சேரி நகராட்சி மூலம்ரூ.44.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் வில்லியனுார் தொகுதி கொம்பாக்கம்பேட் சுடுகாட்டிற்கு சுற்றுமதில் சுவர் அமைப்பதற்கு சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி உதவி பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலை பொறியாளர் ஞானசேகர், ஊர் முக்கியஸ்தர்கள் கப்ரியல், அந்தோணி, அமலோர், கிருஷ்ணராஜ், செல்வநாயகம், கதிரவன், அருள்மணி, சேகர், சிவசங்கரன், சதா சந்திரன், நாகராஜ், பெரியாண்டவர், அந்தோணி, ஜெபஸ்டின், கதிர்வேல், லூர்து நாதன், அலிஸ்டர், அலெக்சாண்டர், வினோத், ரியான்ஸ், முருகன் மற்றும் தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் மணிகண்டன், ராமசாமி, செல்வநாதன், அங்காளன், கோபி, தேசிகன், ஜெகன்மோகன், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.