உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு டி.ஐ.ஜி., தலைமையில் ஆலோசனை

போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு டி.ஐ.ஜி., தலைமையில் ஆலோசனை

புதுச்சேரி : போக்குவரத்து பிரச்னைகள் சரிசெய்வது தொடர்பாக டி.ஐ.ஜி., தலைமையில் நகராட்சி, பொதுப்பணித்துறை, மின்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. புதுச்சேரியில் போக்குவரத்து பிரச்னை பூதகரமாக உருவாகி வருகிறது. சாலையோர ஆக்கிரமிப்பு, சென்டர் மீடியன் இடைவெளி என பல காரணங்களால் டிராபிக் ஜாம் மற்றும் விபத்துக்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் நகராட்சி, பொதுப்பணித்துறை, மின்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. போலீஸ் தலைமையகத்தில் நடந்த கூட்டத்திற்கு டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் தலைமை தாங்கினார். சீனியர் எஸ்.பி.க்கள் கலைவாணன், பிரவின்குமார் திரிபாதி, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், பொதுப்பணித்துறை மத்திய கோட்ட உதவி பொறியாளர் பார்த்தசாரதி, மின்துறை பொறுப்பு அதிகாரி ராஜஸ்ரீ, எஸ்.பி.க்கள் மோகன்குமார், செல்வம், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், சுரேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் பேசுகையில்; டிராபிக் ஜாம் மற்றும் சாலை விபத்துக்களை தடுப்பது போலீசாருக்கு மட்டும் இன்றி அனைத்து துறைக்கும் பொறுப்பு உள்ளது. போலீசார் அனுப்பும் பரிந்துரைகளை ஒருங்கிணைந்து பணியாற்றி விரைவாக முடித்தால், டிராபிக் ஜாம் மற்றும் விபத்துக்களை தடுக்க முடியும் என பேசினார்.கூட்டத்தில், விபத்துக்களை தடுக்க சென்டர் மீடியன் இடைவெளிகளை மூட வேண்டும் இது போன்று போலீசாரின் பரிந்துரைகள் செய்து முடிக்க பல மாதம் ஆகிறது. விபத்து தடுக்க பரிந்துரை செய்யும் இதுபோன்ற பணிகளை பொதுப்பணித்துறை விரைவாக முடித்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ