உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் கட்டணம் நிர்ணயிக்க 29ம் தேதி கருத்து கேட்பு

மின் கட்டணம் நிர்ணயிக்க 29ம் தேதி கருத்து கேட்பு

புதுச்சேரி : புதுச்சேரி மின்துறை,வரும் ஐந்தாண்டிற்கு மின் கட்டணம் நிர்ணயம் செய்வதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் 29ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து மின்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மின்துறை ஒவ்வொரு ஆண்டும் 2,000 கோடி ரூபாய் அளவிற்கு மின்சாரம் கொள்முதல் செய்து, மின் நுகர்வோருக்கு விநியோகம் செய்கிறது.கொள்முதலுக்கும் மின் விநியோகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை சமன் செய்யும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டண உயர்வை இணைமின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பரிந்துரை செய்து, மின் கட்டண உயர்வை அமல்படுத்தி வருகிறது.அதன்படி, இந்த நிதியாண்டு 2025-26 முதல் 2029-30 வரையிலான ஐந்தாண்டு வருவாய் மற்றும் மின்கட்டணம் நிர்ணயம் தொடர்பான மனுக்கள் மீது பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.இக்கூட்டம் வரும் 29ம் தேதி காலை 11:00 மணிக்கு, புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள பி.எம்.எஸ்.எஸ்.எஸ்., அரங்கில் நடைபெற வுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ