உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனை

 பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், புதுச்சேரி அனைத்து பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம், சுற்றுச்சூழல் துறை கருத்தரங்க கூடத்தில் நடந்தது. புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் தலமை தாங்கினார். கூட்டத்தில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் புதிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக அனைத்து தொழிற்சாலைகளிலும், மத்திய மாசுகட்டுபாட்டு குழுமத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தணிக்கை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. ஏற்பாடுகளை புதுச்சேரி மாசுகட்டுப்பாட்டு குழுமத்தின் விஞ்ஞானி செல்வநாயகி, தொழில்நுட்ப உதவியாளர் விமல்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி