உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காமராஜர் அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

காமராஜர் அரசு கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில், பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் (பொ) கதிர்வேல் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் சிவக்குமார் வரவேற்றார். புதுவைப் பல்கலைக் கழக கல்லுாரி வளர்ச்சிக் குழுமத்தின் புல முதன்மையர் சுடலைமுத்து கல்லுாரியின் தமிழ்த்துறை மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி, பேசினார். சுப்ரமணிய பாரதியார் தமிழியற்புலத் துறைத் தலைவர் ரவிக்குமார் வாழ்த்துரை வழங்கினார். உதவிப் பேராசிரியர் அன்புச்செல்வன் நன்றி கூறினார். முன்னாள் மாணவி கிருத்திகா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !