உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பைக் மோதி விபத்து தம்பதி காயம்

பைக் மோதி விபத்து தம்பதி காயம்

பாகூர்: பைக் மோதிய விபத்தில் , தம்பதி காயமடைந்தனர். தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம், சின்ன மந்தை வீதியை சேர்ந்தவர் ரகுராமன், 57; இவர், தனது மனைவி மீராபாயை,53; பைக்கில் அழைத்துக் கொண்டு தவளக்குப்பம் அரவிந்த் கண் மருத்துவமனை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் அருகே வந்த போது, பின்னால் மூன்று பேர் வந்த பைக் முந்தி செல்ல முயன்ற போது, ரகுராமன் ஓட்டி வந்த பைக்கின் பின் பகுதியில் மோதியது. இதில், ரகுராமன், மீராபாய் காயமடைந்தனர். அருகில், இருந்தவர்கள் அவர்களை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மீராபாய் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், விபத்து ஏற்படுத்திய நெல்லித்தோப்பு அரவிந்த் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்