உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிரிக்கெட் பிரீமியர் லீக் - 2025 போட்டி காரைக்கால் போலீஸ் அணி வெற்றி

கிரிக்கெட் பிரீமியர் லீக் - 2025 போட்டி காரைக்கால் போலீஸ் அணி வெற்றி

காரைக்கால் : காரைக்காலில் இந்திய கடலோர காவல்படை சார்பில், நடந்த கிரிக்கெட் போட்டியில் போலீஸ் அணி முதல் பரிசை வென்றது.காரைக்கால் மாவட்டத்தில் இந்திய கடலோரக் காவல்படை மையம் சார்பில், காரைக்கால் கிரிக்கெட் பிரீ மியர் லீக் - 2025 போட்டி நடந்தது. இதில் கடலோரக் காவல்படை, தனியார் துறைமுகம், போலீஸ், ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன.இறுதிப் போட்டியில் காரைக்கால் போலீஸ் அணியும், தனியார் துறைமுக அணியும் மோதின. இதில், போலீஸ் அணி வெற்றி பெற்று முதல் பரிசும், துறைமுகம் அணி இரண்டாம் பரிசும் பெற்றன.வெற்றிப் பெற்ற அணிகளுக்கு இந்திய கடலோர காவல்படை மைய கமாண்டன்ட் சவுமய் சந்தோலா, எஸ்.பி., சுப்ரமணியன், ஓ.என்.ஜி.சி., காவிரி அசெட் மேலாளர் உதய்பாஸ் வான் ஆகியோர் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை