மேலும் செய்திகள்
விபத்தில் படுகாயமடைந்த சாலைப்பணியாளர் இறப்பு
02-Oct-2026
விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகையன், 52, இவர், ஹீரோ டூயட் ஸ்கூட்டர் (டி.என். 51 ஏ.இ. 2115) உறவினர் கஸ்துாரி, 38, என்பவரை கடந்த 27 ம் தேதி இரவு காரைக்கால், கிளிஞ்சல்மேடு வழியாக அழைத்து சென்றார். கோவில்பத்து அருகே ஸ்கூட்டர் வேகத்தடையில் ஏறி இறங்கியபோது நிலைத்தடுமாறி கஸ்துாரி சாலையில் விழுந்தார். படு காயமடைந்த அவரை, தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கஸ்துாரி இறந்தார். விபத்து குறித்து நகர போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Oct-2026