மேலும் செய்திகள்
இடத்தில் ரகளை 8 பேர் அதிரடி கைது
06-Oct-2026
பொது இடத்தில் ரகளை சேதராப்பட்டு போலீஸ் சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளை செய்த கடலுார் ராசாபேட்டை பகுதியை சேர்ந்த திருமூர்த்தி,31; என்பவரை கைது செய்தனர். ரெட்டியார்பாளையம் சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு மூலகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். மகவை நகர் பகுதியில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட புதுசாரம் நடராஜன்,46; என்பவரை கைது செய்தனர். முத்தியால்பேட்டை சிறப்பு உதவி சப்இன்ஸ்பெக்டர் நகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ஏழைமாரியம்மன் கோவில் தெருவில் ரோந்து சென்றனர். பொது இடத்தில் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட கோட்டக்குப்பம் சரண்ராஜ் என்பவரை கைது செய்தனர். காலாப்பட்டு சிறப்பு உதவி சப் இன்ஸ்பெக்டர் மார்க் இளங்கோ தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மாலை கணகசெட்டிக்குளம் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர். பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட மரக்காணம் செந்தில்குமார்,42; என்பவரை கைது செய்தனர். மங்கலம் உதவி சப் இன்ஸ்பெக்டர் பிரசாத் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ஏம்பலம் வெள்ளக்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில், குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட துாக்கணாம்பாக்கம் மணிகண்டன்,29; என்பவரை கைது செய்தனர். மாகே போலீசார், நேற்று முன்தினம் படகு நிறுத்தமிடத்தில் ரோந்து சென்றனர். அப்பகுதியில், குடிபோதையில் ரகளை செய்த வடகரா, மய்யனுாரை சேர்ந்த சலீஷ்,37 என்பவரை கைது செய்தனர். ஏனாம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கிருபாவரம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பைபாஸ், இந்திரா சிலை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளை செய்த, ஆந்திரா மாநிலம் தலவேறுமண்டலம் பகுதியை சேர்ந்த குடுபுடிராஜூ என்பவரை கைது செய்தனர். ஏனாம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பொச்சியா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் பைபாசில், நேரு சிலை அருகில் ரோந்து சென்றனர். அங்கு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட ஏனாம் பெர்ரி ரோட்டை சேர்ந்த அகுலசுரேஷ், 27, என்பவரை கைது செய்தனர்.
06-Oct-2026