மேலும் செய்திகள்
படகு குழாமில் பயணிகள் அவதி
26-Dec-2024
அரியாங்குப்பம் : கடலுார் சாலை நோணாங்குப்பம் படகு குழாமில் வெளி மாநிலங்களில் இருந்து விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மூலம் பல லட்சம் ரூபாய் வருவாய் வரும் படகு குழாமில் போதிய படகுகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்து வருகிறது.இந்நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு என, பண்டிகை கால தொடர் விடுமுறை மற்றும் நேற்று முன்தினம் சனி மற்றும் நேற்று ஞாயிற்று கிழமையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.போதிய படகுகள் இல்லாததால், வெகு நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர்.
26-Dec-2024