மாமனார், மாமியாருக்கு வெட்டு மருமகனுக்கு போலீஸ் வலை
அரியாங்குப்பம்: மாமனார், மாமியாரை கத்தியால் வெட்டிய மருமகனை போலீசார் தேடி வருகின்றனர். கொம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜூ,40. இவரது மனைவி அக்கினேஸ்வரி, 23; இவர் தனது தாய் வீடான அரியாங்குப்பம் சண்முகா நகருக்கு வந்திருந்தார்.ராஜூ, நேற்று முன்தினம் மாமியார் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த மனைவியை தீபாவளி கொண்டாடுவதற்கு தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். அவர் மறுத்தார்.அதில், அவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. ஆத்திமடைந்த, ராஜூ தான் வைத்திருந்த கத்தியால், தனது மனைவியை வெட்ட முயன்றார். அதை தடுக்க வந்த மாமனார் கோவிந்தசாமி, அவரது மனைவி, வரலட்சுமி ஆகியோரை கத்தியால் வெட்டினார். இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றார்.காயமடைந்த இருவரும், அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறனர். புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜூவை தேடி வருகின்றனர்.