5 பேரிடம் ரூ.1.58 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
புதுச்சேர : புதுச்சேரியில், 5 பேரிடம், ரூ.1.58 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரியை சேர்ந்தவர் வினிதா. அவரை மர்ம நபர் ஒருவர்தொடர்பு கொண்டு, வீட்டில் இருந்தேஆன்லைனில்அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறினார். இதனை நம்பி வினிதா ரூ.60 ஆயிரம்முதலீடு செய்து,அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்தார்.இதையடுத்துசம்பாதித்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அதன் பிறகேஅவர் மோசடி கும்பலிடம் ஏமாந்தது தெரிந்தது.தருமாபுரி பகுதியை சேர்ந்த சரண்ராஜ்,ரூ.50 ஆயிரத்தை தவறுதலாக வேறொருவர் வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். இதையடுத்துஅவரால் அந்த பணத்தை மீட்க முடியவில்லை.பொறையூரை சேர்ந்த சுமன் என்பவரின் கிரெடிட் கார்டில் இருந்து மோசடி கும்பல், ரூ.20 ஆயிரத்தை அவருக்கு தெரியாமல் எடுத்துள்ளது.டி.நகர் காவலர் குடியிருப்பை சேர்ந்த மணிகண்டன் ரூ.18 ஆயிரம்;புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் ரூ.10 ஆயிரம் என மோசடி கும்பலிடம் பணத்தை இழந்துள்ளனர்.இந்த 5 பேர் மொத்தம், ரூ.1.58 லட்சத்தை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள், தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.