உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி மோசடி; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை  

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி மோசடி; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை  

புதுச்சேரி : புதுச்சேரியில் போலி விளம்பரத்தை நம்பி ரூ.1 கோடிக்கு மேல் பணத்தை இழந்துள்ளனர்.இது குறித்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறுகையில், சமீப காலத்தில் லோக் அப், வி2, வி3 மற்றும் ஷாப்பி பை போன்ற மொபைல் செயலி மூலம் முதலீடு செய்தால், வாரந்தோறும் லாபத் தொகையை தருவதாக வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் வருகின்றது.அதனை உண்மை என நம்பி அந்த ஆப்களை பதிவிறக்கம் செய்து முதலில் சிறிய தொகையினை முதலீடு செய்கின்றனர். இந்த பணத்திற்கு ஆரம்பத்தில் வாரந்தோறும் லாப பணம் வருகிறது. மேலும், அவர்கள் பல நபர்களை இந்த ஆப் மூலம் சேர்த்துவிட்டால், அதற்கு ஊக்கத்தொகை தருவதாகவும், அதனை ஏற்று உறவினர்கள், நண்பர்கள் போன்ற அனைவருக்கும் அந்த ஆப்பை பற்றி கூறி முதலீடு செய்யுமாறு கூறுகின்றனர்.பின், ஏராளமான மக்கள் முதலீடு செய்த பின் அந்த ஆப்பை டெலிட் செய்து விடுகின்றனர். அதன்பிறகு தான் சைபர் மோசடி கும்பல் உருவாக்கிய செயலி என்பது தெரிய வருகிறது. இதுபோன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரூ. 1 கோடிக்கு மேல் முதலீடு செய்து ஏமாந்தது குறித்து போலீசில் புகார்கள் வந்துள்ளது.முதற்கட்ட விசாரணையில் நைஜீரியா, கம்போடியா நாட்டிலிருந்து இத்தகைய ஆப் உருவாக்கி அங்கிருந்து செயல்படுத்துவது தெரியவந்துள்ளது. ஆகவே, பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம்.இதுபோன்று சமூக வலைதளங்களில் பல போலி விளம்பரங்கள் உலா வருகின்றது. செயலிகளை முற்றிலும் நம்ப வேண்டாம். சைபர் குற்றம் தொடர்பாக 1930 மற்றும் 0413 -2276144, 94892 05246 எண்களிலும், cybercell-py.gov.in, www.cybercrime.gov.inபுகார்களை தெரிவிக்கலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை