உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆரோவில்லில் 12ம் தேதி சைக்கிள் ஓட்டப் பந்தயம்

ஆரோவில்லில் 12ம் தேதி சைக்கிள் ஓட்டப் பந்தயம்

புதுச்சேரி: ஆரோவில்லில் 2வது கிரின்ரைடு சைக்ளோதான் சார்பில், வரும் 12ம் தேதி சைக்கிள் ஓட்டப் பந்தயம் நடக்கிறது. ஆரோவில் கிரின்ரைடு அமைப்பு சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் சைக்கிள் ஓட்டுதலில் ஆர்வம் ஏற்படுத்தும் விதமாக இரண்டாவது சைக்கிள் ஓட்டப் பந்தயத்தை நடத்துகிறது. ஆரோவில் செர்டிடியூட் மைதானத்தில் வரும் 12ம் தேதி போட்டிகள் நடக்கிறது. இதில், சைக்கிள் ஓட்டுதலில் திறன் வாய்ந்தவர்களுக்காக எலைட் பிரிவில் ஆண் - பெண் 65 கி.மீ., மாஸ்டர் பிரிவில் ஆண்கள் மட்டும் 65 கி.மீ., மாஸ்டர் பெண்கள் பிரிவில் 47 கி.மீ., தேர்ச்சி பெற்ற ஆண்கள், பெண்கள் மற்றும் ஜூனியர்கள் பிரிவில் 47 கி.மீ., எட்டு வயதிற்கு மேற்பட்டோர் பங்கேற்கும் பிரிவில் 20 கி.மீ., (ஆரோவில் உள்ளேயே மகிழ்ச்சியாக சைக்கிள் ஓட்டுதல்) என்ற தலைப்பில் சைக்கிள் ஓட்டப் பந்தயம் நடக்கிறது. 65 கி.மீ., போட்டி ஆரோவில் செர்டிடியூட் மைதானத்தில் துவங்கி, திண்டிவனம் வரை சென்று மீண்டும் மொரட்டாண்டி டோல்கேட் அருகே முடிவடைகிறது. அதேபோல் 47 கிலோ மீட்டர் போட்டி ஆரோவில் செர்டிடியூட் மைதானத்தில் துவங்கி திண்டிவனம் பைபாஸ் சாலையில் உள்ள தென்கோடிப்பாக்கம் ஆஞ்சநேயர் சிலை வரை சென்று மீண்டும் மொரட்டாண்டி டோல்கேட்டில் முடிவடைகிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையும் உண்டு. போட்டியில் பங்கேற்பவர்கள் சைக்கிள் மற்றும் ஹெல்மெட் கட்டாயம் கொண்டு வர வேண்டும். போட்டியில் பங்கேற்க www. aurovile sports.inஎன்ற வெப்சைட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை