உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிலிண்டர் வெடித்து தீ விபத்து

சிலிண்டர் வெடித்து தீ விபத்து

நெட்டப்பாக்கம் : நெட்பாக்ககம் அடுத்த கல்மண்டபம் அந்தராச்சிக்குப்பம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பூங்கோதை 55, இவர் மட்டு தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை டீ போடுவதற்காக சிலிண்டர் பத்த வைத்தார். திடீரென சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு வெடித்தது, உடன் பூங்கோதை வீட்டில் இருந்து வெளியே வந்து விட்டார். இதில் அவரது கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த மடுகரை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கூரை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி