டனா புயல் ரயில்கள் ரத்து
புதுச்சேரி: டனா புயல் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:டனா புயல் காரணமாக, புதுச்சேரி ரயில் நிலையத்தில் இன்று , 24ம் தேதி, ரயில் எண், 22603, விழுப்புரம் - காரப்பூர் செல்லும் விரைவு ரயில், 12663, திருச்சி - ஹவுரா விரைவு ரயில் நிறுத்தப்படுகிறது. இவ்வாறு செய்தியில் கூறப்பட்டுள்ளது.