உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

புதுச்சேரி : புதுச்சேரி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் வருகை, சாலை ஆக்ரமிப்பு கடைகள் உள்ளிட்டவைகளால் நெரிசல் தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில் சமீபகாலமாக நகரப்பகுதிகளில், மாடுகள் சுற்றித்திரிவது வாடிக்கையாகி வருகிறது.நேருவீதி, காமராஜ் சாலை, இ.சி.ஆர்., உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இந்த மாடுகளை உரிமையாளர்கள் கட்டுப்படுத்துவது கிடையாது.அதேபோல, நகராட்சி அதிகாரிகளும், இந்த விவகாரத்தில் மெத்தனமாக உள்ளனர்.இதனால் நெரிசல் மட்டுமின்றி, விபத்து அபாயமும் பன்மடங்குஅதிகரித்துள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இந்த பிரச்னை கடந்த பல மாதங்களாகவே இருந்து வருகிறது.இதுவரை உரிய நடவடிக்கை இல்லை. இதனால் சாலைகளில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை