மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம்
23-Sep-2024
புதுச்சேரி: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்தார்.வில்லியனுார் அடுத்த சேந்தநத்தம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகள் இந்துமதி, 26; வீட்டில் இருந்த இவரை நேற்று முன்தினம் முதல் காணவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, கலியமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
23-Sep-2024