உள்ளூர் செய்திகள்

வாலிபர் சாவு

பாகூர் : வீட்டில் வாலிபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பாகூர் அடுத்த கீழ்பரிக்கல்பட்டு ஏரிக்கரை சாலையை சேர்ந்தவர் வினோத், 33; கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை செக்யூரிட்டி. இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிட்டு வந்தார்.நேற்று முன்தினம், அவரது மனைவி கலைதேவி வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த வினோத், உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கி கிடந்தார்.தகவலறிந்த கலைதேவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ