உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலையில் விழுந்த கொத்தனார் இறப்பு

சாலையில் விழுந்த கொத்தனார் இறப்பு

புதுச்சேரி: சாலையில் கீழே விழுந்து தலையில் அடிப்பட்டு காயங்களுடன் கிடந்த கொத்தனார் இறந்தார். முத்திரையர்பாளையம், பஜனைமட வீதியை சேர்ந்தவர் ஜீவா,52; கொத்தனார். இவருக்கு குடி பழக்கம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே, சாலையோரத்தில் விழுந்து கிடந்தார். இது பற்றி அவரது மனைவி எழிலரசிக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.அவரது மனைவி உடன் அவரை, அங்கிருந்தவர்கள் உதவியுடன், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை