மேலும் செய்திகள்
சுவாமி வீதியுலாவில் தகராறு
09-Aug-2025
புதுச்சேரி : களிமண் எடுப்பதாக கவர்னருக்கு புகார் அளித்த விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். காட்டேரிக்குப்பம், சாது செட்டித் தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன்;, விவசாயி. இவர் எல்லையம்மன் கோவில் செயலாளராக உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள காட்டேரி ஏரியில் அரசு அனுமதி அளித்ததை விட சட்ட விரோதமாக களிமண் எடுப்பதாக கவர்னர், தலைமை செயலருக்கு புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த சங்கர்கணேஷ், 35; ஜெயக்குமார், 35, ஆகியோர் கடந்த 8ம் தேதி லோகநாதனை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். லோகநாதன் புகாரின் பேரில், காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
09-Aug-2025