மேலும் செய்திகள்
டைடல் பார்க்கிற்கு வெடிகுண்டு மிரட்டல்
07-Sep-2025
புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலக ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர். லாஸ்பேட்டை, கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் சரண்ராஜ், 37; காலாப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது வாட்ஸ் ஆப்பில் வந்த வீடியோ ஒன்றை, அதேப் பகுதியை சேர்ந்த நண்பர் ஜலபதி என்பவரிடம் காண்பித்து பேசி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கருவடிக்குப்பத்தை சேர்ந்த ராஜா அந்த வீடியோவை பார்த்தபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே, ராஜாவிற்கு ஆதரவாக அவரது உறவினர் செண்பகராஜன் இணைந்து சரண்ராஜை திட்டி, மரத்தால் ஆன கொடி கம்பத்தால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சரண்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
07-Sep-2025