இசை கலைஞருக்கு கொலை மிரட்டல்
அரியாங்குப்பம் : இசைக்கலைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். புதுச்சேரி, கந்தப்பா முதலியார் வீதியை சேர்ந்தவர் சீத்தாராமன், 50; இசை கலைஞர். இவரது உறவினரின் மகன்கள் பிரான்ஸ் நாட்டில் வசிக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் தோட்டம், தவளக்குப்பம் தானாம்பாளையத்தில் உள்ளது. அந்த இடத்திற்கு, சீத்தாராமன் பெயரில் எழுதி கொடுக்கப்பட்டு, அவர் நிர்வகித்து வருகிறார்.இந்நிலையில், அந்த வீட்டில் வாடகைக்கு கலியமூர்த்தி மனைவி செல்வி என்பவர் குடியிருந்து வருகிறார். தோட்டத்தையும் அவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுக்கு பின், வீட்டை காலி செய்யுமாறு, சீத்தாராமன் கூறினார். அவர் வீட்டை காலி செய்யாமல் காலதாமதப்படுத்தி வந்தார்.வீட்டை காலி செய்யுமாறு, தொடர்ந்து கேட்ட, சீத்தாராமனை, அவதுாரக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து, கொடுத்த புகாரின் பேரில், செல்வி மீது தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.