உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொதுப்பணித்துறை செயலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு

பொதுப்பணித்துறை செயலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு

புதுச்சேரி: பொதுப்பணித் துறை செயலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த கருணை அடிப்படையில் வேலை பெற்றோர் தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது. சங்க தலைவர் ஜெயசந்திரன் அறிக்கை: பொதுப்பணித் துறையில் விதிமுறையின்படி 5 சதவீதம் இடங்கள் கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களை நியமனம் செய்ய வேண்டும். 2000ம் ஆண்டு முதல் இதுவரை வாரிசு பணியிடங்களை நிரப்பவில்லை. இதனால் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கொல்லைப்புற நியமனங்களுக்கு விதிமுறை மீறி பணி நிரந்தரம், ஊதிய உயர்வு என சகலமும் அளிக்கும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், புதுச்சேரி அரசு, கருணை அடிப்படையில் வேலை கொடுக்க கடந்த 25 ஆண்டுகளாக மறுத்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திய போது, இன்னும் ஒரு மாதத்திற்குள் வாரிசு பணியிடங்கள் நிரப்பப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்படி வாரிசு பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனை இனியும் பொறுத்து கொள்ள முடியாது. எனவே விதிமுறைப்படி வாரிசு பணியிடங்கள் நிரப்பாத பொதுப்பணித் துறை செயலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை