புதுச்சேரி:புதுச்சேரி கடற்கரை சாலையில் ருசி நிறுவனத்தின் இரண்டு நாள் குல்பி, ஐஸ்கிரீம் விற்பனை மேளா துவங்கியது.கோடைக் காலம் துவங்கி விட்டது. சூரியன் சுட்டெரிக்கிறது. அடிக்கிற வெயிலுக்கு இதமாக 'குளுகுளு' என ஏதாவது சாப்பிட வேண்டும் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆசைப்படுவர்.இந்த ஆசையை நிறைவேற்றுவதற்காக தனித்துவமான சுவைகளில் குல்பி, ஐஸ்கிரீம்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் ருசி நிறுவனம், புதுச்சேரி கடற்கரை சாலையில் லே-கபே ஓட்டல் அருகே இரண்டு நாள் அசத்தலான சிறப்பு விற்பனை மேளாவை நேற்று துவக்கியுள்ளது.விற்பனை மேளாவின் முதல் நாளில் வழக்கமான குல்பி, ஐஸ்கிரீம் வகைகள் போன்று இல்லாமல், தேடிப் பிடித்து ரோஸ் குல்பி, ஹனி என அசத்தலான குல்பிகளும், அசர அடிக்கும் பிளாக்கரண்ட் டுவிஸ்ட், ஸ்ட்ராபெரி டுவிஸ்ட், கிரேப், லெமன், ஆரஞ்சு, சேமியா, குல்கந்து மில்க் உள்ளிட்ட 15 ஐஸ்கிரீம் வகைகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.இதன் எதிரொலியாக, வாக்கிங் வந்திருந்த பொதுமக்கள், சுற்றுலா வந்த உள்ளூர், வெளியூர் சுற்றுலா பயணிகளால் ருசி ஸ்டாலில் கூட்டம் அலைமோதியது. ருசி அரங்கினை மொய்த்த குட்டீஸ்கள் முதல் தாத்தா பாட்டிகள் வரை, ஆளாளுக்கு ருசி குல்பி, ஐஸ்கிரீம்களை முண்டியடித்து விரும்பி வாங்கி சாப்பிட்டனர்.'அடடே... என்ன டேஸ்ட்...' என்று அதன் சுவையில் ஒவ்வொருவரும் கரைந்தனர். ஒவ்வொரு குல்பி, ஐஸ்கிரீம்களும் சுண்டியிழுக்கும் சுவை, மறக்க முடியாத ருசி என திக்குமுக்காடினர். அப்படியே ருசி குல்பி, ஐஸ்கிரீம்களுடன் அழகிய செல்பியையும் எடுத்து சமூக வலைதளங்களில் தட்டிவிட்டு, லைக்குகளையும் அள்ளினர்.ஐஸ்கிரீம், குல்பியுடன் குழந்தைகள்போல் குதுகாலித்த சுற்றுலா பயணிகள் கூறும்போது, 'ருசி குல்பி, ஐஸ்கிரீம் செல்பியும், அதன் சுவையும் என்றைக்கும் மனதில் இருக்கும்' என்றனர்.இந்த சுவையான அனுபவம் உங்களுக்கும் கிடைக்க வேண்டாமா... அப்ப, ஞாயிற்றுக் கிழமையான இன்றைக்கு சட்டுபுட்டுனு உடனே கிளம்புங்கள்... சுட்டெரிக்கும் கோடையை ருசி குல்பி, ஐஸ்கிரீம்களுடன் கொண்டாட புதுச்சேரி கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்துடுங்க.அப்புறம் மறக்காதீங்க. இன்றுடன் ருசி விற்பனை மேளா நிறைவு பெறுகிறது. விற்பனை நேரம்: காலை 10:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை மட்டுமே.