உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊழல் அதிகாரிகள் சொத்துக்களை பறிமுதல் செய்ய  வலியுறுத்தல்

ஊழல் அதிகாரிகள் சொத்துக்களை பறிமுதல் செய்ய  வலியுறுத்தல்

புதுச்சேரி: ஊழல் அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய, மாணவர் மற்றும் பெற்றோர் நலச் சங்கம் தலைவர் பாலாசுப்ரமணியன் வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை; புதுச்சேரியில் சம்பிரதாயத்திற்காக லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடத்துகின்றனர். வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட மருத்துவ இடங்களில் போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டு துாதரகத்தில் சான்று பெற்று விண்ணப்பித்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. சுகாதாரத்துறையில் மருந்துகள் கொள்முதலில் 3 கோடிக்கு மேல் ஊழல், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் விதிகளை மீறி தனியார் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்த சுற்றுச்சுழல் துறை அதிகாரிகள் மீது ஊழல் புகார் பதிவு, போக்குவரத்து, பத்திரப் பதிவுத் துறை மற்றும் வணிகவரித்துறையில் ஜி.எஸ்.டி., முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. புதுச்சேரி அரசு, ஊழலில் ஈடுப்பட்ட அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி