உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி பிரதேச கட்டடக் கட்டுமான தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ) சார்பில் தொழிலாளர்களுக்கு பண்டிக்கைக்கால உதவித்தொகையாக ரூ.8 ஆயிரம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. தட்டாஞ்சாவடி கட்டுமானத் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நிர்வாகி மணிபாலன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சீனுவாசன், தலைவர் தினேஷ்குமார், துணைத் தலைவர் ராமசாமி, நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், மதிவாணன், ராஜ்குமார், சுரேஷ், விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். நலவாரிய உதவித்தொகைகளை உயர்த்தி வழங்கிட வேண்டும். பண்டிகைக்கால உதவித்தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். நலவாரியக் குழுவை அமைத்திட வேண்டும். தகுதியுள்ள அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களையும் நலவாரியத்தில் இணைத்திட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை