ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: சோசலிஸ்ட் யூனிட் சென்டர் ஆப் இந்திய கம்யூ., சார்பில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்களின் சொத்துகளை பாதுகாக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி பிரெஞ்சு துாதரகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில செயலாளர் லெனின்துரை தலைமை தாங்கினார்.மாநில குழு உறுப்பினர் முத்து, ஏ.ஐ.யு.டி.யு.சி., மாநில செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் சாமிக்கண்ணு, சிவசங்கரன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்களின் சொத்துகளை பாதுகாக்கவும், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற முதியவர் சொத்தை ஈன கிரையம் கேட்டு மிரட்டிய முன்னாள் தி.மு.க., அமைச்சர் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர்.