மேலும் செய்திகள்
வைப்பு நிதிக்கான ஆணை வழங்கல்
20-Sep-2025
புதுச்சேரி : உழவர்கரை தொகுதி பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வைப்பு நிதி வங்கி புத்தகத்தை சிவசங்கர் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு வழங்கினார். புதுச்சேரியில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு நிதி வைப்பு திட்டத்தின் கீழ் குழந்தையின் வங்கி கணக்கில் ரூ. 50 ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, உழவர்கரை தொகுதியில் பிறந்த 60 பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ், ரூ.50 ஆயிரம் வைப்பு நிதிக்கான வங்கி புத்தகம் மற்றும் சான்றிதழ்களை சிவசங்கர் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு வழங்கினார். துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ., அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
20-Sep-2025