உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிகர் உற்சவம்: சுவாமி வீதியுலா

தேசிகர் உற்சவம்: சுவாமி வீதியுலா

புதுச்சேரி; முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், தேசிகர் உற்சவத்தை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம் கடந்த 2ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. தினமும் காலை 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், மங்களாசாசனம் மற்றும் சேவை சாற்று முறை நிகழ்ச்சி நடந்தது. இரவில் பெருமாள் மற்றும் தேசிகர் புறப்பாடு நடந்து வந்தது. நேற்று முன்தினம் புரட்டாசி மாத 4வது சனிக்கிழமையை முன்னிட்டு, காலை லட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை நிகழ்ச்சி நடந்தது. இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ராமபத்திரன் மற்றும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 12ம் தேதி ஊஞ்சல் உற்சவம், நாளை 13ம் தேதி பானக பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ