உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி

 தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி

திருக்கனுார்: திருக்கனுார் போன் நேரு மேல்நிலைப் பள்ளியில் நடந்த 'தினமலர் - பட்டம்' இதழின் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. திருக்கனுார், போன் நேரு மேல்நிலைப் பள்ளி யில் 'தினமலர் - பட்டம்' இதழின் வினாடி வினா போட்டி நடந்தது. இதில் பள்ளியை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன. போட்டியில், பிளஸ் 1 மாணவர்கள் சந்திரமோகன், சேஷாத்ரி முதலிடத்தையும், பிளஸ் 1 மாணவிகள் வினிஷா, இலக்கியா 2ம் இடத்தையும் பிடித்தனர். இதையடுத்து, பட்டம் வினாடி வினா இறுதி போட்டிக்கு தேர்வான மாணவர்களை பள்ளியின் முதல்வர் துரை ஜானகிராமன் பாராட்டி பரிசுகள் வழங்கினர். ஆசிரியர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை