மேலும் செய்திகள்
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
09-Jan-2026
புதுச்சேரி: வில்லியனுார் துாய இதய மரியன்னை அரசு நிதி உதவிபெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளி யில் நடந்த 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வில்லியனுார் துாய இதய மரியன்னை அரசு நிதி உதவிபெறும் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' நாளிதழின் வினாடி வினா போட்டி நடந்தது. இதில் பள்ளியை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில், 8ம் வகுப்பு மாணவி கள் முகிபிரியா, கனிஷ்கா முதலிடத்தையும், மாணவிகள் ஷபானியா, ரக் ஷிதா 2ம் இடத்தையும் பிடித்தனர். பட்டம் வினாடி வினா இறுதி சுற்றுக்கு தேர்வான மாணவிகளை, பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆலிஸ் மேரி பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
09-Jan-2026