தினமலர் நீட் மாதிரி தேர்வு புதுச்சேரியில் இன்று பிரமாண்டமாக நடக்கிறது டாக்டர் கனவு நனவாக மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு
புதுச்சேரி: தினமலர் நாளிதழ், ஸ்பெக்ட்ரா நிறுவனத்துடன் இணைந்து நடத்தும், நீட் மாதிரி தேர்வு இன்று 20ம் தேதி புதுச்சேரியில் பிரமாண்டமாக நடக்கிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான, நீட் தேர்வு, மே 4ம் தேதி நாடு முழுதும் நடைபெற உள்ளது. இந்தியா முழுதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வை எழுத தயாராகி உள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் நீட் நுழைவு தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் டாக்டர் கனவினை நிறைவேற்றிட தினமலர் நாளிதழ், ஸ்பெக்ட்ரா நிறுவனத்துடன் இணைந்து, நீட் மாதிரி தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது.இதற்கான முன் பதிவு கடந்த 14ம் தேதி துவங்கியது. டாக்டர் கனவில், மாணவ மாணவிகள் போட்டிபோட்டி நீட் மாதிரி தேர்வு எழுத விண்ணப்பித்து வந்தனர். இறுதி நாளான நேற்றும் ஆர்வமாக முன் பதிவு செய்தனர்.தினமலர் நீட் மாதிரி தேர்வு திட்டமிட்டப்படி இன்று (20ம் தேதி) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, புதுச்சேரி புது பஸ்டாண்ட் மங்கலட்சுமி பின்புறம் உள்ள ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பிரமாண்டமாக நடக்கிறது.இந்த மாதிரி தேர்வில் பதிவு செய்துள்ள மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இது மாதிரி நீட் தேர்வு என்றாலும், தேசிய தேர்வு முகமை நடத்தும் அசல் தேர்வு போன்றே நடத்த அனைத்து விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, தேசிய தேர்வு முகமை விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்துமே தினமலர் நீட் மாதிரி தேர்விலும் மாணவர்கள் நலனுக்காக பின்பற்றப்பட உள்ளது. எனவே நீட் தேர்வில் பங்கேற்பதற்கான சிறந்த அனுபவத்தை தினமலர் மாதிரி தேர்வில் பங்கேற்பதன் மூலம் பெற முடியும். கேள்வி முறை
நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்கள் கொண்டதாக இருக்கும். இயற்பியல், வேதியியல் பாடங்களில் தலா 45 கேள்விகள் தாவரவியல், விலங்கியல் உள்ளடங்கிய உயிரியல் படிப்பில் 90 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். இந்த 180 கேள்விகளை மாணவர்கள் கட்டாயமாக எதிர் கொண்டு 720 மதிப்பெண்களுக்கு விடையளிக்க வேண்டி இருக்கும். அனைத்து கேள்விகளும் மல்டிபிள் சாய்ஸ் என்ற கொள்குறி வகையில் இடம் பெறும். 1 கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்கள். சரியான பதிலுக்கு 4 மதிப்பெண் வழங்கப்படும்.தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். பதில் அளிக்காத கேள்விகளுக்கு மதிப்பெண் இல்லை. நீட் தேர்விற்கு பல ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் அனுபவம் வாய்ந்த சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, ஒவ்வொரு கேள்விகளும் வடிவமைக்கப்பட்டுள்ளதால், தேசிய தேர்வு முகமையில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து காத்திருக்கும் மாணவர்களுக்கு தினமலரின் நீட் மாதிரி தேர்வு மதங்களை சுயமாக பரிசோதித்துக்கொள்ள அரிய வாய்ப்பு. எனவே பதிவு செய்த மாணவர்கள் மிஸ் பண்ணாம பெற்றோருடன் வாங்க....
அனைவருக்கும் உணவு
நீட் மாதிரி தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு உணவு வழங்க தினமலர் நாளிதழ் ஏற்பாடு செய்துள்ளது.
மாதிரி நுழைவு நேர தேர்வு அட்டவணை
காலை 9.00-9.40 மணி வரை- தேர்வு வளாகத்திற்கு மாணவர்கள் உள்ளே அனுமதிகாலை 9.41-9.45 மணி வரை-மாணவர் வருகை முடித்தல்.தேர்வு அறைக்குள் வருகைகாலை 9.55 மணி- முதல் மணி அடித்தல். மாணவர்களுக்கு ஓ.எம்.ஆர்., ஷீட் வழங்கல்காலை 9.56--10.00 மணி வரை- இரண்டாம் மணி அடித்தல். தேர்வு ஆரம்பம் காலை 11 மணி-நேரம் அறிய மூன்றாம் மணி அடித்தல் மதியம் 12 மணி-நேரம் அறிய நான்காம் மணி அடித்தல் மதியம் 1 மணி-ஐந்தாம் மணி அடித்தல் விடைத்தாள் திரும்ப பெறுதல்.
வந்துடுங்க
தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் நுழைவு தேர்வினை சில மாணவர்கள் சரியான திட்டமிடல் இன்றி எதிர்கொள்கின்றனர். குறிப்பாக கடைசி நேரத்தில் காலதாமதமாக தேர்வு எழுத அவசர கதியில் ஓடி வருகின்றனர். இது போன்ற மாணவர்களை தேசிய தேர்வு முகமை எந்த காரணத்தை கொண் டும் அனுமதிப்ப தில்லை. எனவே தினமலர் நீட் மாதிரி தேர்விலும் இதே நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது. எனவே நீட் தேர்வினை எழுத முன் கூட்டியே திட்டமிடலுடன் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்துடுங்க....