உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில் தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி

ஆச்சார்யா சிக் ஷா மந்திர் பள்ளியில் தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி

வில்லியனுார்: ஆச்சார்யா சிக் ஷா மந்திர் மேல்நிலைப் பள்ளியில், 'தினமலர் பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி ந டந்தது. புதுச்சேரி 'தினமலர் பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் பரிசு வெல்' மெகா வினாடி வினா பள்ளி அளவிலான போட்டி உருவையாறு ஆச்சார்யாபுரத்தில் உள்ள ஆச்சார்யா சிக் ஷா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளியின் முதல்வர் சரவணன் தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியை பட்டம் ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். போட்டியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 500 மாணவர்கள் கலந்து கொண்டனர். முதல் நிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 16 பேரை 8 அணிகளாக பிரித்து இறுதி சுற்றுப் போட்டி நடந்தது.இதில், பிளஸ் 1 மாணவர்கள் அருள்செல்வன், உதுமான் அலி அணி முதலிடத்தையும், பிளஸ் 1 மாணவர்கள் சோமேஸ்வர் மற்றும் பிரபஞ்சன் அணி 2ம் இடத்தை பிடித்து, மெகா வினாடி வினா போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் பதக்கம் மற்றும் பரிசுகளை பள்ளி முதல்வர் சரவணன் வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை