உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அலுவலக உதவியாளரிடம் லஞ்சம் பாகூர் கொம்யூன் எல்.டி.சி., கைது

அலுவலக உதவியாளரிடம் லஞ்சம் பாகூர் கொம்யூன் எல்.டி.சி., கைது

பாகூர் : லஞ்சம் வாங்கிய இளநிலை எழுத்தரை போலீசார் கைது செய்தனர். கிருமாம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் மகேஷ்குமார், 31; இவர் கடந்த 17ம் தேதி பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தார். இவரிடம் அதே அலுவலகத்தில் இளநிலை எழுத்தராக பணிபுரியும் நாராயணசாமி, மருத்துவ பரிசோதனை மற்றும் இதர கோப்புகள் தயார் செய்வதற்காக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம், மகேஷ்குமார் புகார் தெரிவித்தார். இதையடுத்து எஸ்.பி., ராமராஜ் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் பூங்காவனம் தலைமையில் போலீசார் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு நேற்று மதியம் 12.30 மணிக்கு மாறுவேடத்தில் சென்றனர். போலீசார் அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவிய பத்தாயிரம் ரூபாய் மகேஷ்குமார், எழுத்தர் நாராயணசாமியிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நாராயணசாமியை கையும் களவுமாக கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை