மேலும் செய்திகள்
'தினமலர்- பட்டம்' இதழ் வினாடி - வினா போட்டி
16-Oct-2025
புதுச்சேரி: லாஸ்பேட்டை, விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில், தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழின் வினாடி வினா, போட்டி நேற்று நடந்தது. பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி முதன்மை முதல்வர் பத்மா தலைமை தாங்கினார். இந்த போட்டியில், அணிக்கு 2 பேர் வீதம், 8 அணிகளாக மாணவர்கள் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில், 8ம் வகுப்பு மாணவர்கள் கார்த்திக் மற்றும் பிரதிஷ் முதலிடம் பெற்றனர். 8ம் வகுப்பு மாணவிகள் கார்த்திகா மற்றும் விகாஷினி இரண்டாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் கீதா பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, ஆசிரியை சந்தனமேரி செய்திருந்தார்.
16-Oct-2025