உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருமண உதவித்தொகை பயனாளிகளுக்கு வழங்கல் 

திருமண உதவித்தொகை பயனாளிகளுக்கு வழங்கல் 

புதுச்சேரி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், உப்பளம் தொகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு திருமண உதவி தொகைக்கான ஆணையை வழங்கினார். இதில், தி.மு.க., தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, தொண்டரணி ஜோஸ்லின், கிளை செயலாளர்கள் செல்வம் மற்றும் ராகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ