உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுவாமி வீதியுலாவில் தகராறு

சுவாமி வீதியுலாவில் தகராறு

பாகூர்; கிருமாம்பாக்கம் அருகே சுவாமி வீதியுலாவில் ரகளை செய்து, பொது மக்களை தாக்கி, மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை கிராமத்தில், கடந்த 1ம் தேதி இரவு மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, சுவாமி வீதியுலா நடந்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்கிற விஸ்வநாதன் வீதியுலாவில் பங்கேற்றவர்களிடம் தகராறு செய்தார். தட்டிக்கேட்ட அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ், 47; மற்றும் ஆனந்த செழியன், 35; ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். யுவராஜ் அளித்த புகாரின் பேரில், விக்னேஷ் என்கிற விஸ்வநாதன் மீது, கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ