மேலும் செய்திகள்
தகராறு செய்த 6 பேர் கைது
21-Sep-2024
புதுச்சேரி: லாஸ்பேட்டை, ரெட்டியார்பாளையத்தில் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டை உதவி சப் இன்ஸ்பெக்டர் புஷ்பலிங்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தாகூர் கலை கல்லுாரி மைதானம் அருகே குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்ட விழுப்புரம், அனுமந்தை, கீழ்பேட்டையை சேர்ந்த சிவக்குமார், 46: கைது செய்தனர். இதேபோல், லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே தகராறில் ஈடுபட்ட கிருஷ்ண நகர், 7 வது குறுக்கு தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் 63; இ.சி.ஆர் தனியார் ஓயின்ஷாப் அருகே தகராறில் ஈடுபட்ட சாந்தி நகர், பாரதிதாசன் வீதியை சேர்ந்த லோகநாதன், 29; ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், மூலக்குளம் ஜான்குமார் நகர் அருகே தகராறில் ஈடுபட்ட தருமபுரியை சேர்ந்த தினேஷ், 32; என்பரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
21-Sep-2024