| ADDED : ஜன 11, 2024 04:05 AM
புதுச்சேரி: புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டியில், ஏனாம் அணி வெற்றி பெற்றது. கிரிக்கெட் அஸோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம் நிறுவனம் இணைந்து நடத்தும், புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான ஆண்கள் டி-20 கிரிக்கெட் போட்டி கடந்த, 2ம் தேதி துவங்கியது.இதில், புதுச்சேரி வடக்கு, புதுச்சேரி தெற்கு, புதுச்சேரி மேற்கு, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் என ஆறு அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள், பேன்கோடு ஆப்பில், நேரலையாக ஒளிபரப்பாகிறது.நேற்று முன்தினம் மதியம் 3:00 மணிக்கு நடந்த போட்டியில், ஏனாம் மற்றும் மாகி அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த மாகி அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 127 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து ஆடிய ஏனாம் அணி, 18 ஓவர்களில் 105 ரங்களுக்கு சுருண்டது. மாகி அணி 22 ரன்களில் வெற்றி பெற்றது. அந்த அணியின் விஜித் 4 விக்கெட்டுகள் எடுத்து, ஆட்ட நாயகன் விருது பெற்றார்.இரவு 7:00 மணிக்கு நடந்த போட்டியில், புதுச்சேரி வடக்கு மற்றும் காரைக்கால் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த காரைக்கால் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 122 ரன்கள் எடுத்தது.புதுச்சேரி வடக்கு அணி, 19.3 ஓவர்களில், 5 விக்கெட்டுகள் இழந்து, 124 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியில் சுனில் குமார், 68 ரன்கள் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.நேற்று மதியம் 3:00 மணிக்கு நடந்த போட்டியில் ஏனாம் மற்றும் புதுச்சேரி மேற்கு அணிகள் மோதின. ஏனாம் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது. நாகூர் பாபு 61 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய புதுச்சேரி மேற்கு அணி 20 வர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து, 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஏனாம் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியை சேர்ந்த நாகூர் பாபு ஆட்டநாயகன் விருது பெற்றார்.