உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பொதுமக்களுக்கு இடையூர்: 2 பேர் கைது 

 பொதுமக்களுக்கு இடையூர்: 2 பேர் கைது 

திருக்கனுார்: திருக்கனுாரில் பொதுமக்களுக்கு இடையூராக தகராறில் ஈடுப்பட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது, திருக்கனுார், கே.ஆர்.பாளையம் புளியதோப்பு அருகே, குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூராக தகராறில் ஈடுப்பட்டு கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், விழுப்புரம், வி.புத்துாரைச் சேர்ந்த பால்ராஜ், 29; செங்மேட்டைச் சேர்ந்த பிரபு, 33; என்பது தெரியவந்தது. இதையடுத்து, குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூர் ஏற்படுத்தியதாக இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ