உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெத்தி செமினார் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

பெத்தி செமினார் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

புதுச்சேரி: காந்தி வீதியில் உள்ள பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளியில், தீபாவளி கொண்டாடப்பட்டது. பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளி முதல்வர் தேவதாஸ் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறினார். சிறப்பு விருந்தினராக சம்பத் எம்.எல்.ஏ., பங்கேற்று, தீபாவளி பண்டிகையை, பாதுகாப்பான முறையில், பட்டாசு வெடித்து, மகிழ்ச்சியுடன் கொண்டாட மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில், வாணவேடிக்கை மற்றும் வண்ண மத்தாப்புகள் கொளுத்தி மாணவர்கள் கொண்டாடினர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி துணை முதல்வர் சின்னப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை