உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெத்தி செமினார் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

பெத்தி செமினார் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

புதுச்சேரி: மூலக்குளம், பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் தீபாவளி கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் பாஸ்கல் ராஜ் தலைமை தாங்கினார். விழாவில், சபாநாயகர் செல்வம், மஹிந்திரா நிர்வாக இயக்குநர் ருத்ர குமார் ஆகியோர் பங்கேற்று, தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில், பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி, வாழ்த்து தெரிவித்தனர். விழாவில், பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் பேசுகையில், இந்த புனிதமான நாளில், உறவுகளை இணைக்கவும், புதிய நினைவுகளை உருவாக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபடாமல் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி