தீபாவளி தொகுப்பு காங்., வழங்கல்
புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் காங்., மாநில செயலாளர் குமரன் தனது சொந்த செலவில் தீபாவளி தொகுப்பினை வழங்கி வருகிறார். அதன்படி தொகுதிக்குட்பட்ட வைத்திக்குப்பம் பகுதியில் நேற்று தீபாவளி தொகுப்பினை வழங்கினார். மாநில செயலாளர் ராஜாராம், காங்.,நிர்வாகிகள் முரளி, மனோகர், மோகனசுந்தரம், மருவின், செல்வம், குமார், வசந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.