உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தி.மு.க., வேட்பாளர் கென்னடி உப்பளத்தில் ஓட்டு வேட்டை

தி.மு.க., வேட்பாளர் கென்னடி உப்பளத்தில் ஓட்டு வேட்டை

புதுச்சேரி: உப்பளம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் நேற்று கூட்டணி கட்சியினருடன் இறுதி கட்ட பிரசாரம் மேற்கொண்டார். உப்பளம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கென்னடி, அவரது மனைவி ஜெசிந்தா ஆகியோர் கடந்த இரு வாரமாக தொகுதி முழுதும் வீடு, வீடாக சென்று கடந்த 5 ஆண்டுகளாக தொகுதியில் செய்துள்ள வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நலப்பணிகளை கூறி ஓட்டு சேகரித்தனர். பிரசாரத்தின் இறுதிநாளான நேற்று வேட்பாளர் அனிபால் கென்னடி, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி முழுதும் திறந்த வேனில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தன்னை மீண்டும் தொகுதியில் வெற்றி பெற செய்தால், மக்கள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவேன் என உறுதி அளித்து அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை