மேலும் செய்திகள்
புதுச்சேரிக்கு தி.மு.க., பொறுப்பாளர் நியமனம்
01-Oct-2025
புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதியில் அசுத்தமாக விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் காண்பித்து, நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். நெல்லித்தோப்பு தொகுதி பெரியார் நகர், முருகன் கோவில் வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் கருப்பாக வந்துள்ளது. இதை அறிந்த தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், அப்பகுதிக்கு சென்று குடிநீரை பார்வையிட்டு, மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். பின், விநியோகம் செய்யப்பட்ட அசுத்தமான குடிநீரை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் காண்பித்து, சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். இதில், தலைமை பொறியாளர் வீரசெல்வம், தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.
01-Oct-2025