தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம் ஜெகத்ரட்சகன் எம்.பி., துவக்கி வைப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., சார்பில் 'உடன்பிறப்பே வா' எனும் பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 8 தொகுதிகளில் துவங்கியது. இதற்காக தி.மு.க., ஒருங்கிணைப்பாளராக ஜெகத்ரட்சகன் எம்.பி., நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில், இரண்டாம் கட்டமாக நேற்றுஊசுடு தொகுதி உளவாய்க்கால் கிராமத்திலும், இந்திரா நகர் தொகுதி தர்மாபுரி, கதிர்காமம் தொகுதி சண்முகாபுரம், தட்டாஞ்சாவடி தொகுதி பாக்குமுடையான்பேட், லாஸ்பேட்டை தொகுதி அரசு மருத்துவமனை அருகில், காலாப்பட்டு தொகுதி கருவடிக்குப்பம் பாரதி நகர், காமராஜர் நகர் தொகுதி கிருஷ்ணா நகர், ராஜ்பவன் தொகுதி மிஷன் வீதி -பெருமாள் கோவில் சந்திப்பிலும் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம் துவங்கப்பட்டது. தி.மு.க., அமைப்பாளர் சிவா தலைமை தாங்கினார்.அவைத் தலைவர் சிவக்குமார், தி.மு.க., எம்.எல்.ஏக்கள்., அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., முகாமை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்.,நந்தாசரவணன்,மூர்த்தி, மாநில துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள்லோகையன், ஆறுமுகம், காந்தி, அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், ராமசாமி, செல்வநாதன், சக்திவேல், தங்கவேலு, வேலவன், சண்முகம், வேலன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தொகுதி செயலாளர்கள் இளஞ் செழியப்பாண்டியன்,ராதாகிருஷ்ணன், வடிவேல், ஆறுமுகம், தியாகராஜன், சத்தியவேலு, சிவக்குமார், மோகன், தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளர் டாக்டர் நித்தீஷ், இந்திரா நகர்சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.