உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குப்பை அள்ளும் நிறுவனத்திற்கு தி.மு.க., எம்.எல்.ஏ., எச்சரிக்கை

குப்பை அள்ளும் நிறுவனத்திற்கு தி.மு.க., எம்.எல்.ஏ., எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் சரியான முறையில் செயல்படவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என, சம்பத் எம்.எல்.ஏ., எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை: புதுச்சேரியில் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வரும் கிரீன் வாரியர் நிறுவனம், குப்பை வார வழங்கியுள்ள டாடா ஏஸ் வாகனங்களில் வடிவமைப்பு குறைபாடுகள் காரணமாக, அந்த வாகனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் காம்பேக்ட் வாகனங்களில் ஏற்ற முடியவில்லை. இதனால், டாடா ஏஸ் வாகனங்கள் நேரடியாக மேட்டுப்பாளையம் குப்பை சேகரிப்பு கிடங்கிற்கு சென்று குப்பைகளை இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வாகனம் ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே பணி செய்ய முடிகிறது. அதேபோல் ஒவ்வொரு வார்டிலும் முன்பு ஏழு நபர்கள் பணியாற்றிய நிலையில், தற்போது மூவரை மட்டுமே பணியில் ஈடுபடுத்தி வருவது தொழிலாளர்களுக்கு அதிகமான சுமையையும், பணித்திறனைக் குறைக்கும் சூழலையும் உருவாக்கியுள்ளது. இதனை காரணம் காட்டி துப்புரவு ஊழியர்களை நீக்கி, வட இந்தியர்களை பணியில் அமர்த்தி வருகிறது. இதன் மூலம் புதுச்சேரியில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் உள்ளது. மேலும் நகரின் துப்புரவு பணிகள் சரிவடைந்து, பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் கிரீன் வாரியர் நிறுவனத்திற்கு எதிராக மக்களின் நலனுக்காக தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை