உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய அரசின் சூழ்ச்சியை தி.மு.க., முறியடிக்கும்: மாநில அமைப்பாளர் சிவா பேச்சு

மத்திய அரசின் சூழ்ச்சியை தி.மு.க., முறியடிக்கும்: மாநில அமைப்பாளர் சிவா பேச்சு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க., சார்பில் சிறப்பு வாக்காளர் திருத்தம் தொடர்பான ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் நித்தீஷ் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார். அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் மதிமாறன், அவைத்தலைவர் கணேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாநில அமைப்பாளர் சிவா, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் செய்யும் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.தொடர்ந்து, மத்திய அரசின் நிர்பந்தம் காரணமாக சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் நடக்கிறது. இதில் நமக்கு எதிராக பல சதி திட்டங்கள் தீட்டப்படும். அதையெல்லாம் எதிர்கொள்ளும் வகையில், எந்த தவறும் நடக்க விடாமல் முகவர்கள் விழிப்புடன் தீவிரமாக பணியாற்ற வேண்டும். மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் நித்தீஷ் களமிறக்கிய பின் தட்டாஞ்சாவடி தொகுதி எழுச்சி பெற்றுள்ளது. வரும் 2026 சட்டசபை தேர்தலில் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கால் பதிக்க மத்திய பா.ஜ., நினைக்கிறது. அந்த சூழ்ச்சிகளை எல்லாம் முடியடித்து தி.மு.க., வெல்லும் என்றார். கூட்டத்தில், இளங்கோ, தொகுதி துணைச் செயலாளர்கள் குடியரசு, சுகுணா, திருலோகச்சந்தர், மாநில பிரதிநிதி ராஜசேகர், சங்கர், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ