டாக்டர்கள் கவுரவிப்பு
புதுச்சேரி: டாக்டர் தின விழாவில், ராஜிவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை டாக்டர்கள் கவுரவிக்கப்பட்டனர். ராஜிவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை உயிரி வேதியியல் துறை சார்பில், டாக்டர்கள் தின விழா நேற்று நடந்தது. மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன் முன்னிலை வகித்தார். உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரொசாரியோ, மகப்பேறு மருத்துவ துறை தலைவர் வல்சாடயானா, மக்கள் தொடர்பு அதிகாரி குருபிரசாத் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் அப்போலோ மருத்துவமனை மருத்துவ ஆலோசகர் ராணி ராதாகிருஷ்ணன், பெர்க் மான் நிறுவன மண்டல தலைவர் பலராம் ஆகியோர் நோய் குறியீடுகள் குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து, உயிரி வேதியியல் துறை தலைவர்கள் முரளி நாகராஜன், வாணி ஆகியோர் டாக்டர்களை கவுரவித்தனர்.